×

நாகர்கோவில் அருகே வெடிகுண்டு செயலிழப்பு படை சோதனை தென்னந்தோப்பில் புதைத்து வைத்த மேலும் 70 கிலோ பட்டாசு பறிமுதல்-தலைமறைவானவரை பிடிக்க 2 தனிப்படைகள்

ஈத்தாமொழி  : நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 8 சாக்கு மூடைகளில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 70 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் பாக்கியராஜா என்ற ராஜன் (42). பெயிண்டர். இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் வெடி மருந்துகளை வாங்கி பதுக்கி வைத்து பட்டாசு தயாரித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென இந்த வெடிகள் வெடித்து, பாக்கியராஜாவின் மகள் வர்ஷா (10) உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 70 கிலோ வெடி மருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராமலெட்சுமி என்பவர் தான் வெடிமருந்துகளை, பாக்கியராஜாவுக்கு சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ராமலட்சுமியையும், அவரது  சகோதரி மண்டைக்காடு சேரமங்கலத்ைத ேசர்ந்த தங்கம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். வேறு பகுதியில் வெடி மருந்துகள் உள்ளதா? என்பது பற்றி கைதான ராமலெட்சுமி, தங்கத்திடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் காவல்துறையிடம் கூற வில்லை என கூறப்படுகிறது. கைதான ராமலெட்சுமியின் மகள் பூபதி. இவர் நாகர்கோவில் அருகே உள்ள தர்மபுரத்தில் தனது கணவர் ராஜேந்திரன் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார். இவர்களது வீட்டையொட்டி, பின்புறம் வேறு நபருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்துகள் நேற்று முன் தினம் இரவு பயங்கர சத்தத்துடன் வெடித்தன. குண்டு வெடித்தது போல் சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வலைகள் ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்த ஜன்னல்கள் நொறுங்கின. இதில் அவரவர் வீடுகளில் இருந்த ராஜாத்தி (38), அவரது மகள் ஆஷிகா (14) மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த சிறுமி அக்‌ஷயா (13) ஆகியோர் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் காயம் அடைந்தனர்.இந்த தகவல்  அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, ராஜாக்கமங்கலம் இன்ஸ்ெபக்டர்  காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து வெடி  விபத்தால் மரங்களில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் போலீஸ் மோப்ப நாய் ‘காஸ்பர்’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியில் மண்ைண ேதாண்டி மூடிய தடயம் இருந்தது. எனவே அந்த பகுதிகளில் மேலும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாமா? என்பதை கண்டறியும் வகையில், நேற்று காலை அந்த பகுதியில் வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு ேசாதனையை தொடங்கினர். இதில் அந்த பகுதியில் 8 சாக்கு மூடைகளில்  ஓலை பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இவை சுமார் 70 கிலோ இருக்கும். இவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து நேற்று மாலை வரை சோதனை நடைபெற்றது. இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு நடந்த வெடி விபத்து தொடர்பாக ராஜாக்கமங்கலம கிராம நிர்வாக அதிகாரி பிரதீப் அளித்த புகாரின் பேரில், தர்மபுரத்தை  சேர்ந்த ராஜேந்திரன் மீது வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். ஆறுதெங்கன்விளையில்  பாக்கியராஜா வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு அவரது மகள் உயிரிழந்த அன்று, அவருக்கு வெடி மருந்து சப்ளை செய்த ராமலெட்சுமி தன்னிடம் இருந்த வெடி மருந்துகளை தர்மபுரத்தில் இருந்த தனது மருமகன் ராஜேந்திரனை வரவழைத்து மறைத்து வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ராஜேந்திரன், அந்த வெடி மருந்துகளை வாங்கி வந்து, வீட்டின் பின்புறம் உள்ள மற்றொரு நபருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் குழி தோண்டி வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருக்கலாம் என்றும், புதைத்து வைக்கப்பட்ட வெடி மருந்துகள் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக  வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது. ராஜேந்திரன் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வரலாம் என போலீசார் கூறி உள்ளனர்….

The post நாகர்கோவில் அருகே வெடிகுண்டு செயலிழப்பு படை சோதனை தென்னந்தோப்பில் புதைத்து வைத்த மேலும் 70 கிலோ பட்டாசு பறிமுதல்-தலைமறைவானவரை பிடிக்க 2 தனிப்படைகள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Ethamozhi ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில்...