×

மை 3 வெப்சீரிஸில் ஹன்சிகா: ரோபோவாக நடிக்கிறார்

சென்னை: சாந்தனு, ஹன்சிகா நடிக்கும் இயக்குநர் எம்.ராஜேஷின் ‘மை3’ வெப் சீரிஸின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கின்ற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். கடந்த 2019ம் ஆண்டு அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் கடைசியாக வெளியானது. இப்போது அவர் ஜெயம் ரவியை வைத்து ‘ஜெஆர்30’ (தற்காலிக தலைப்பு) படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்குகிறார். இந்த வெப் சீரிஸுக்கு ‘மை3’ என தலைப்பிடப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிடும் இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி, அஷ்னா ஜவேரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளார் ராஜேஷ்.

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இதில் ரோபோவாக ஹன்சிகா நடிக்கிறார். விஞ்ஞானி கேரக்டரில் சாந்தனுவும் ஹன்சிகாவின் காதலராக முகேன் ராவும் நடிக்கிறார்கள். ஜெயம் ரவி படத்தை இயக்கியபடி, இந்த வெப்சீரிஸையும் இயக்கி வருகிறார் ராஜேஷ்.

The post மை 3 வெப்சீரிஸில் ஹன்சிகா: ரோபோவாக நடிக்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hansika ,Chennai ,M. Rajesh ,Shantanu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...