×

மிகப்பெருமை வாய்ந்த ஏவிஎம் உலக உருண்டையின் பின்னணியில் மறைந்துள்ள கதை!

ஏவிஎம் உலக உருண்டை என்பது தினசரி யாரொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சென்னையின் மிகப்பெரிய அடையாளம். பல திரைப்படங்களில் அது இடம் பெற்றிருப்பதுடன் பலரின் சினிமா கனவுகளையும் சாதனைகளையும் தன்னகத்தே பிடித்து வைத்துள்ளது. 1950-களில் ஏவிஎம் புரொடக்சன், ஏவிஎம் ஸ்டுடியோஸ் என வாயிலின் இரண்டு பக்கமும் தனித்தனி எழுத்துக்களை கொண்டிருக்கும்.

திரு ஏவி.மெய்யப்ப செட்டியார் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றே என காட்டும் விதமாக இரண்டையும் ஒன்றாக்க விரும்பினார். திரு.பி.எஸ்.கோவிந்தராவ் என்கிற கலை வல்லுனரை அழைத்து விவாதித்தபோது தான் இந்த உலக உருண்டையின் மூலமாக ஏவிஎம் புரொடக்சன், ஏவிஎம் ஸ்டுடியோஸ் இரண்டையுமே ஒன்றாக காட்சிப்படுத்தலாம் என்கிற யோசனை உருவானது.

இந்த உலக உருண்டை இரவிலும் ஒளிரும் விதமாக நியான் எழுத்துக்கள் பொருத்தப்பட்டு பெங்களூருவில் உருவாக்கப்பட்டது. இத்தனை வருடங்களில் பல சிரத்தைகளையும் தாங்கியபடி அவருடைய மற்றும் சென்னையின் பாரம்பரியத்தையும் நினைவூட்டும் ஒரு பிரபலமான அடையாளமாக திகழ்கிறது. நீங்கள் தாரளாமாக இதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விதமாக இதேபோன்ற பிரதிகள் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திலும் இருக்கின்றன.

 

The post மிகப்பெருமை வாய்ந்த ஏவிஎம் உலக உருண்டையின் பின்னணியில் மறைந்துள்ள கதை! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AVM ,Chennai ,AVM Studios ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...