×

ரோட்டில் நின்று விசில் அடித்ததை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஆசிரியையை கண்டித்து மறியல்

சேலம்: சேலம் கருப்பூரை அடுத்த வெள்ளக்கல்பட்டி மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்தவர் ரத்தினம். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய்கண்ணன் (15), சேலம் 4 ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி மாலை, பள்ளி முடிந்து, சஞ்சய்கண்ணன் பஸ் ஸ்டாப்பில் தனது நண்பர்களுடன்  நின்றிருந்த போது, சாலையின் மற்றொரு பகுதியை பார்த்து விசில் அடித்ததாக கூறப்படுகிறது. அங்கு  மாணவிகளுடன், பள்ளியில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியை ஒருவரும் இருந்துள்ளார். அந்த ஆசிரியை அப்போதே மாணவனை கண்டித்துள்ளார். தொடர்ந்து, 18ம் தேதி காலை பள்ளிக்கு வந்த சஞ்சய் கண்ணனிடம், அந்த விவகாரம் குறித்து வகுப்பாசிரியர் கேள்வி எழுப்பி, கண்டித்துள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சஞ்சய், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவனின் உடல் வைக்கப்பட்டிருந்த சேலம் அரசு மருத்துவமனையில், நேற்று காலை ஏராளமான உறவினர்கள் திரண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள், திடீரென சேலம்-ஓமலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ மாணவனின் சாவுக்கு ஆசிரியைதான் காரணம். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை மூட வேண்டும். அதுவரை மாணவனின் உடலை பெற மாட்டோம்,’’ என்றனர்.தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு, உடலை பெற்றுச் சென்றனர். இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (சேலம் நகர்ப்புறம்) உதயகுமார் தலைமையில், டிஇஓ (ஊரகம்) சுமதி, பள்ளி துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்….

The post ரோட்டில் நின்று விசில் அடித்ததை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: ஆசிரியையை கண்டித்து மறியல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Rathinam ,Vellakalpatti Manjulampallam ,Salem Karupura ,Sanjaykannan ,Dinakaran ,
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...