×

வெற்றி மாறன் இயக்கத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கணும்: சாக்ஷி அகர்வால்

சிறிய பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வந்த சாக்ஷி அகர்வால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த ஆறு மாதத்தில் அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தில் முழுநீள ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், பிரபுதேவா நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள ‘ஹங்கமா’, ஓடிடியில் வெளியாகியுள்ள “என் எதிரே ரெண்டு பாப்பா” படங்களில் கிளாமராக நடித்துள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்கிற தன் ஆசையை சாக்ஷி வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: பிக்பாஸ் எனக்கு மிகப்பெரிய அடையாளம், பிக்பாஸ் எல்லோரிடமும் என்னை பற்றி அறிமுகம் தந்தது. பிக்பாஸ் அறிமுகத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. உண்மையில் என் திரைப்பட வாய்ப்புக்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை.

திரைப்படம் என்பது எனது கனவு. அதனால் தான் டான்ஸ், ஆக்சன் கற்றுக்கொள்ள தனியாக கிளாஸ் போய்க் கொண்டிருக்கிறேன். ”நான் கடவுள் இல்லை” படத்தில் நான் நடித்த ஆக்சன் காட்சிகள் நன்றாக இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. என் கதாபாத்திரங்கள் ஒரே சாயலில் இருக்க கூடாது. ஒரே மாதிரி பாத்திரங்களில் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் எனது திறமையை வெளிப்படுத்தவே விருப்பம். வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு கிராமத்து வேடத்தில் நடிக்க வேண்டும். எனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். என்கிறார் சாக்ஷி அகர்வால்.

The post வெற்றி மாறன் இயக்கத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கணும்: சாக்ஷி அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sakshi Agarwal ,Maradan movement ,Saakshi Agarwal ,S. PA Chandrasekar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பான் இந்தியா படங்களிலும் சாக்‌ஷி அகர்வால்