×

கல்வராயன்மலையில் சாலை போட வனத்துறை தடை; நோயாளிகளை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை, பொட்டியம், இன்னாடு உள்ளிட்ட 15 ஊராட்சிகள் அடங்கிய 172 சிறு மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. ஒரு ஊராட்சியில் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் அருகருகில் இருப்பதில்லை. பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் இந்த உட்கிராமங்களுக்கு பெரும்பாலும் சாலைவசதிகள் இருப்பதில்லை. கடந்த திமுக ஆட்சியில்தான் கல்வராயன் மலைக்கு பல கிராமங்களில் மண் சாலை போடப்பட்டதுடன், மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட மண்சாலை மழை பொழிவின் காரணமாக மேடு பள்ளம் நிறைந்த மண் சாலையாகவே இருக்கிறது. கல்வராயன்மலையில் உள்ள கிராமங்களில் சாலை போட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியும், வனத்துறையின் தடையால் சாலையை போட முடியவில்லை. கல்வராயன்மலையை ஒட்டி உள்ள ஏற்காடு மலை, ஜவ்வாது மலை போன்ற இடங்களில் சாலை வசதி நன்றாக உள்ளது. அங்கெல்லாம் வனத்துறை இப்படி நடந்து கொள்ளவில்லை. அந்த மலைகளில்தான் வனவிலங்குகள் அதிகம் உள்ளது. ஆனால் கல்வராயன்மலையில் மானை தவிர பெரிய விலங்குகள் அதிகம் இல்லை. ஆனால் வனவிலங்குகளை காரணம் காட்டி இங்கு வனத்துறையினர் அதிகம் கெடுபிடி காட்டுகின்றனர். கல்வராயன்மலையில் சாலை வசதி இல்லாததால் கருவேலம்பாடி, வேங்கோடு, வாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் நடந்து வருவதற்கே மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, விஷஜந்துக்கள் கடித்தாலோ பள்ளமும், படுகுழியுமான சாலையில் கட்டிலில் வைத்தோ, தூக்கு கட்டியோ தூக்கி வரும் அவலநிலை இன்றளவும் நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு மலையில் சாலை வசதி இல்லாத கிராமங்களில் தார்சாலை போட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். …

The post கல்வராயன்மலையில் சாலை போட வனத்துறை தடை; நோயாளிகளை கட்டிலில் தூக்கி செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Kalvarayanmalai ,Chinnasalem ,Vellimalai ,Potiyam ,Innadu ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...