×

மகன்கள் முகத்தை காட்டினார் நயன்தாரா: இன்ஸ்டாவிலும் இணைந்தார்

சென்னை: முதல்முறையாக தனது மகன்களின் முகத்தை காட்டிய நடிகை நயன்தாரா, இன்ஸ்டாகிராமிலும் இணைந்தார். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர்கள் வைத்தார். இந்நிலையில் குழந்தைகளின் முகத்தை இதுவரை நயன்தாரா காட்டவில்லை. அதேபோல், நயன்தாரா எந்த சமூக வலைத்தளத்திலும் தனக்கென பக்கம் தொடங்காமல் இருந்தார். இப்போது முதல்முறையாக நேற்று பகல் 11.20 மணியளவில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கிய அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெறும் ‘தலைவர் நிரந்தரம்’ என்ற பாடல் வரிகள் இசையுடன் ஒலிக்க, நயன்தாரா தனது இரண்டு மகன்களை தூக்கி வருகிறார். அப்போது தனது மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டுகிறார். ‘நாங்க வந்துட்டோம்’னு சொல்லு என கேப்ஷனும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

The post மகன்கள் முகத்தை காட்டினார் நயன்தாரா: இன்ஸ்டாவிலும் இணைந்தார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,CHENNAI ,Instagram ,Vignesh Sivan ,Ruthronil N Shivan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குளிக்கும்போதும்… உடை மாற்றும்போதும்...