×

காவல்நிலையத்தில் கூட்டம் ஜெயகுமார் மீது புதிய வழக்கு

திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி  கூட்டம் கூடியதால், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்பட 100 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில்  திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, திருச்சியில் 2 வாரம்  தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில்  நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன்  வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 14ம் தேதி மற்றும் 16ம் தேதி திருச்சி  கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஜெயகுமார் கையெழுத்திட்டார். அந்த இரண்டு  நாட்களும் அவருடன் அதிக அளவிலான தொண்டர்கள் வந்து காவல் நிலையத்தில்  குவிந்து அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். இதில் கடந்த 16ம் தேதி  கையெழுத்திட வந்த போது, அதிகளவிலான தொண்டர்கள் குவிந்ததால் அந்த பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்ட அதிமுகவினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கொரோனா விதிமுறைகளை மீறி  கூட்டம் கூடியது, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுதல்  உள்ளிட்ட பிரிவுகளில் கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் சேரன் நேற்று முன்தினம்  இரவு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமையான  நேற்று 3வது முறையாக கன்டோன்மென்ட் காவல் நிலையம் வந்து கையெழுத்திட்டார்….

The post காவல்நிலையத்தில் கூட்டம் ஜெயகுமார் மீது புதிய வழக்கு appeared first on Dinakaran.

Tags : Jeyakumar ,Trichy ,AIADMK ,-minister ,Jayakumar ,Trichy police station ,Corona ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய...