×

உத்திரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 150 பேர் உயிரிழப்பு? மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை

சமோலி: உத்திரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 150 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் துரித படுத்தப்பட்டுள்ளது. நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர்….

The post உத்திரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 150 பேர் உயிரிழப்பு? மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை appeared first on Dinakaran.

Tags : Sudde ,Utrakhand state ,Samoli ,National disaster recovery force ,Utrakhand ,Dinakaran ,
× RELATED ராமர் கோயில் தொடக்க விழாவில்...