×

முதியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

செங்கல்பட்டு: மறைமலைநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ரவி (57). இவர் தனது நிலத்தை விற்பனை செய்ய₹5 லட்சத்தை முன்பணமாக பெற்றார். பின்னர், அதை சிங்கபெருமாள் கோயில் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்ய நேற்று தனது மொபட்டில் சென்றார். வங்கியில் பணம் செலுத்த தாமதமாகும் என வங்கி நிர்வாகம் கூறியது. இதனால் ரவி, அருகில் உள்ள கூரியர் நிறுவனத்துக்கு, சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது, வங்கி அருகே நிறுத்திய, அவரது மொபட்டில் இருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து  மறைமலைநகர் போலீசில், ரவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post முதியவரிடம் ரூ.5 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ravi ,Shekchihar Street, Thiramalayanagar ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை