×

பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற நடத்துனர், ஓட்டுனர் மீது காவல் நிலையத்தில் புகார்: பைக்கை இடித்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரல்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கொல்லச்சேரி பகுதியை சேர்ந்தவர் கவுதமி(28). பெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். பணி முடித்து இரவு பெரும்புதூரிலிருந்து அரசு பேருந்தில் (தடம் எண் – 549) நசரத்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நசரத்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு நடத்துனர், ஓட்டுனரிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் கண்டு கொள்ளாமல் பேருந்தை தொடர்ந்து இயக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு கவுதமியை அழைத்து செல்ல வந்த அவரது கணவர் இருசக்கர வாகனத்தை ஓட்டியடியே பேருந்தில் இருந்த தனது மனைவியை கிழே இறக்கி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கும் செவி சாய்க்காத இருவரும் பேருந்தை தொடர்ந்து இயக்கி உள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த கவுதமியின் கணவர் பூந்தமல்லி காவல் நிலையம் அருகே சாலையில் அரசு பேருந்துக்கு முன்னால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அதையும் பொருட்படுத்தாத பேருந்து ஓட்டுனர் பேருந்தின் கதவையும் திறக்காமல் முன்னால் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை இடித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் கவுதமியை இறக்கிவிட்டனர். இதையடுத்து, அவரது கணவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது புகாரளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற நடத்துனர், ஓட்டுனர் மீது காவல் நிலையத்தில் புகார்: பைக்கை இடித்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரல் appeared first on Dinakaran.

Tags : Police station ,Poontamalli ,Gautami ,Kollacherry ,Perumbudur ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை