×

சுஷாந்த் சிங் வீட்டில் அதா சர்மா

பாலிவுட் இளம் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ல் மும்பை பாந்த்ராவில் இருக்கும் மான்ட் பிளாங் அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள தனது வீட்டில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர வைத்தது. இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட வீட்டுக்கு யாரும் வாடகைக்கு குடியேறக்கூட வரவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.

தற்போது அந்த வீட்டை நடிகை அதா சர்மா வாங்கியுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதா சர்மாவிடம் கேட்டபோது, ‘அனைத்து விஷயங்களும் உறுதியான பிறகு அதுபற்றி பேசுவேன்’ என்றார். இந்தி நடிகையான அதா சர்மா, தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்த அவர், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மூலம் பிரபலமானார்.

The post சுஷாந்த் சிங் வீட்டில் அதா சர்மா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Adah Sharma ,Sushant Singh ,Bollywood ,Sushant Singh Rajput ,Mont Blanc ,Bandra, Mumbai ,Sushant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில்...