×

கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி இந்தியாவில் மேலும் 7 தடுப்பூசி உற்பத்தி: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

கொல்கத்தா: நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், விரைவில் மேலும் இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்தார்.இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‘அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா சார்ந்து இருக்கப்போவதில்லை. இந்தியாவில் மேலும் ஏழு கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வகை செய்யும் அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. திறந்த சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் போது அதன் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும்’ என்றார்.மேலும் ஆந்திர மாநிலம், அமராவதியில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், ‘இதுவரை இந்தியாவில் இருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 25 நாடுகள் நமது தடுப்பூசிக்காக வரிசையில் காத்து நிற்கின்றன. இந்தியாவை உலக வரைபடத்தில் இந்திய தடுப்பூசிகள் கொண்டு போய் வைத்திருக்கின்றன. ஏழைகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசியை மானிய அடிப்படையில் விநியோகிக்கிறது. சில நாடுகள், தடுப்பூசி நிறுவனங்களுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளன. அவை வணிக ரீதியில் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கின்றன. ஒய் 2 கே பிரச்சினையின்போது இந்தியா உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையிடமாக உருவானதுபோலவே இப்போது மருந்து துறையில் உள்நாட்டில் உள்ள திறன்களையும், வழிகளையும் பயன்படுத்தி இந்தியாவை உலகின் மருந்தகமாக ஆக்குவதுதான் பிரதமர் மோடியின் எண்ணம்’ என்றார்….

The post கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி இந்தியாவில் மேலும் 7 தடுப்பூசி உற்பத்தி: மத்திய சுகாதார அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Covaxin ,Union Minister ,of Health Information ,Kolkata ,India ,Federal Minister of Health Information ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...