×

செப்டம்பர் 15ல் மார்க் ஆண்டனி ரிலீஸ்

சென்னை: விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் 2வது சிங்கிள் பாடலான ‘ஐ லவ்யூடி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். ரோகேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடலை எழுதியுள்ளனர். காதல் தோல்வியை சொல்லும் பாடலாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில் விஷால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post செப்டம்பர் 15ல் மார்க் ஆண்டனி ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mark Antony ,Chennai ,Vishal ,Adhik Ravichandran ,Trisha Illanna ,Anbanavan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மார்க் ஆண்டனி படத்திற்காக மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்..!!