×

மீஞ்சூர் அருகே அடகு கடை தம்பதியை தாக்கிய வாலிபர் கைது: வைரல் வீடியோவை வைத்து போலீஸ் நடவடிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வாலிபர் குடிபோதையில் அத்துமீறி அடகு கடைக்குள் நுழைந்து, அதன் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய சம்பவத்தில். கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் வைரலானதை அடுத்து அதனை ஆதாரமாக வைத்து போலீசார் வாலிபரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப்ராம் (54). அடகு கடை உரிமையாளர். இந்த கடையில் கடந்த 13ம் தேதியன்று அதே பகுதியை சேர்ந்த சம்பந்தம் (35) கூலி தொழிலாளி. இவர், குடிபோதையில் அத்துமீறி அடகு கடைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல் குறித்தான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அதில், அடகு கடையின் ஷட்டரை இழுத்து மூடி, மற்றொரு வாசல் வழியே உள்ளே புகுந்த சம்பந்தம், கடை உரிமையாளரை தாக்கி உள்ளார். இதை தடுக்க வந்த அவரது மனைவியையும் சரமாரியாக கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகளும், கண்காணிப்பு காமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பிரதாப்ராம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிரதாப்ராமின் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கிய சம்பந்தத்தின், வைரல் வீடியோவை ஆதாரமாக வைத்து, அவர் மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் நேற்றுமுன்தினம் அடைத்தனர். …

The post மீஞ்சூர் அருகே அடகு கடை தம்பதியை தாக்கிய வாலிபர் கைது: வைரல் வீடியோவை வைத்து போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pawn Shop ,Meenchur ,Bonneri ,
× RELATED மீஞ்சூரில் வீட்டு வாசலில்...