×

ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு நோட்டீஸ்: வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி

பூந்தமல்லி: ராமாபுரத்தில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற  வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பெரியார் சாலை மற்றும் திருமலை நகர் ஆகிய பகுதிகளில் ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்த வீடுகளை எல்லாம் கணக்கெடுப்பு செய்து அகற்ற வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து, நேற்று 10க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இங்கு உள்ள வீடுகளை கணக்கெடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது.  இதனால் அதிகாரிகளுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது குடியிருப்புவாசிகள் கூறியது, பல ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருவதாகவும், தற்போது ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். மேலும், இங்கு வசித்து வரும் நிலையில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி என அனைத்தும் முறையாக செலுத்தி வரும் நிலையிலும், ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர் என அப்பகுதி மக்கள் கூறினர்….

The post ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளுக்கு நோட்டீஸ்: வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Ramapuram Lake ,Poonthamalli ,Ramapura ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது