×

சலார் படத்துக்காக 5 மொழியில் டப்பிங் பேசும் ஸ்ருதிஹாசன்

ஐதராபாத்: ‘கே ஜி எஃப்’ படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் ‘சலார்’. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதிபாபு, டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி இருக்கும் இந்த இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ என்ற தலைப்பில் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது ‘சலார் -பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன் அவர் கதாபாத்திரத்திற்கு அவரே சொந்த குரலில் பின்னணி பேசுகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே பின்னணி பேசுகிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான ‘வீரசிம்ஹ ரெட்டி’, ‘வால்டேர் வீரய்யா’ ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. அவர் இப்போது தெலுங்கில் ‘ஹாய் நான்னா’, ஆங்கிலத்தில் ‘தி ஐ’ படங்களில் நடித்து வருகிறார்.

The post சலார் படத்துக்காக 5 மொழியில் டப்பிங் பேசும் ஸ்ருதிஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shruti Haasan ,KGF ,Prashant Neel ,Prabhas ,Prithviraj ,Jagapathi Babu ,Tinu Anand ,Iswari Rao ,Shreya Reddy ,Ramachandra Raju ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி