×

குன்றத்தூர் பிரதான சாலையில் சாலையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

குன்றத்தூர்: குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே பிரதான சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதனால், 60 அடி சாலை, தற்போது 40 அடி சாலையாக குறுகியது. இதையொட்டி, இச்சாலையில் காலை, மாலை மற்றும் அலுவலக நேரம் மட்டுமின்றி எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சாலை ஆக்கிரமிப்புகளால் கனரக வாகனங்கள் மட்டுமின்றி, அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது. குறிப்பாக, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்பட உயிர் காக்கும் வாகனங்களும் விரைந்து செல்ல முடியாத அவல நிலை நிலவியது.மேலும், பல்லாவரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்வதற்கு குன்றத்தூர் சாலையே பிரதான சாலையாக உள்ளது. இதில், சமீப காலமாக இந்த பிரதான சாலையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும்  குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், பெரும்பாலான சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தங்களது கடைகளை அகற்றுவதற்கு, தானாக முன் வந்தனர். அதில், அகற்றாமல் இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை, நேற்று காலை நகராட்சி ஊழியர்கள், வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் அகற்றினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்….

The post குன்றத்தூர் பிரதான சாலையில் சாலையை ஆக்கிரமித்த கடைகள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuntharatur ,Kuntarthur ,Kuddharatur Bus Station ,Kuntathur ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்துத்தராத...