×

உள்ளாடை இருந்தாலும் பாலியல் பலாத்காரமே: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஷில்லாங்: ‘பெண்ணின் உள்ளாடையை அகற்றாமல் உறவு கொண்டாலும் அது பாலியல் பலாத்காரமே,’ என்று மேகாலயா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேகாலயாவில் 10 வயது சிறுமியை கடந்த 2006ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் அல்லது கூடுதல் 6 மாத சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மேகாலயா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 14ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, `இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 375(பி) பிரிவில், பெண்ணின் உள்ளாடையை அகற்றாமல் உறவு கொண்டாலும் அது பாலியல் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சரியான படிப்பில்லாமல் சராசரி அறிவுடையவராக இருப்பதாக, உணர்ச்சி வசப்பட்டு குற்றம் இழைத்து விட்டதாக வாக்குமூலம் அளிப்பதால், அவர் பாலியல் உறவு கொள்ளவில்லை என்று அர்த்தமாகி விடாது. பலாத்காரத்தின் போது சிறுமி உள்ளாடை அணிந்திருந்ததாக வைத்து கொண்டாலும் கூட, குற்றவாளி செய்தது பாலியல் பலாத்காரமே,’ என்று கூறி, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மேகாலயா உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. …

The post உள்ளாடை இருந்தாலும் பாலியல் பலாத்காரமே: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Shillong ,Meghalaya High Court ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...