×

வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுரை: பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், மதுரை தல்லாகுளத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அமைச்சர் செந்தில்பாலாஜி, பிஜிஆர் நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார். செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெல் மற்றும் பிஜிஆர் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்தது. பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கக்கூடாது என டான்ஜெட்கோ கூறியது. டான்ஜெட்கோ எச்சரிக்கையை மீறி பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அந்நிறுவனம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என்னை கைது செய்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். செபிக்கு புகார் அனுப்ப உள்ளேன். எந்த கட்சி ஊழல் செய்தாலும் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுப்பேன். ஊழல் குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜ தேர்தலில் நேர்மையான முறையில் வந்த பணத்தை செலவு செய்கிறது என்றார்….

The post வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Anamalai ,Madurai ,Bajaka ,Membership Admission ,Camp ,Madurai Dallakulam ,State Leader ,Dinakaran ,
× RELATED 140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்