×

ரூ.18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

திருச்சி: திருச்சி அடுத்த திருவெறும்பூர், கைலாசபுரத்தை சேர்ந்தவர் நியாத் சகியா (40).  பெல் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக உள்ளார். இவர் நவல்பட்டு பஞ்சாயத்தில் ஆர்எஸ்கே நகரில் புதிய வீடு கட்ட மின் இணைப்புக்கு நவல்பட்டு மின் வாரிய  அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதற்கு ரூ.20,000 லஞ்சம் தரும்படி மின்வாரிய ஆய்வாளர்  விக்டர் (41) பேரம் பேசி, முடிவாக ரூ.18 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். இதுபற்றி நியாத் சகியா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று அவரிடம் ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஆய்வாளர் விக்டரிடம் கொடுத்தபோது, போலீசார் மடக்கி கைது செய்தனர். …

The post ரூ.18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Niath Sakiya ,Kailasapuram, Thiruverumpur ,Bell ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...