×

மார்த்தாண்டம் அருகே தரமற்ற முறையில் சாலை சீரமைப்பு: தார் பெயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் இருந்து பெரும்புளி வழியாக சிராயன்குழி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரோடு உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இந்த ரோடை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை இந்த ரோடு செப்பனிடப் பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்த போது சீரமைத்த சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர் விசாரணையில், காஞ்சம்புறத்தில் இருந்து வலையசுற்று சாலையை தரமற்றமுறையில் செப்பனிட சென்ற ஊழியர்களை பொதுமக்கள் விரட்டியடித்ததும், அந்த தார் கலவையை சீராயன்குழியில் ரோட்டில் இரவோடு இரவாக போட்டு செப்பனிட்டு சென்றதும் தெரியவந்தது இதுகுறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த அதிகாரிகள் பார்வையிட்ட போது ரோடு தரமற்ற முறையில் செப்பனிடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்….

The post மார்த்தாண்டம் அருகே தரமற்ற முறையில் சாலை சீரமைப்பு: தார் பெயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Sirayankuzhi National Highway ,Nimmalaikadai ,Perumapuli ,Dinakaran ,
× RELATED விஜய் வசந்த், தாரகை கத்பர்ட் வெற்றி திமுக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்