×

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பஞ்சாப் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இன்று (நேற்று) பஞ்சாப் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்….

The post பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bhagwant Maan ,Chief Minister of ,Punjab ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Bhagwant Mann ,Chief Minister of Punjab ,
× RELATED 400 தொகுதி என்பது பொய் கோஷம் அடுத்து...