×

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: நாளை நடக்கிறது

சோளிங்கர்: மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் பங்குனி உத்திரம் என்பதால் பங்குனி மாத உத்திர திருநாளில் வைணவ திருக்கோயில்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி  108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் காலை 7 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பக்தோசித பெருமாள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊர் கோயிலிலிருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக பெரிய மலை திருக்கோயிலுக்கு எழுந்தருள்கிறார். மலைக்கோயிலில் மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு பெரிய அலங்கார திருமஞ்சனமும், 4 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வருதலும் 4.30 மணிக்கு காசி யாத்திரை, மாலை மாற்றுதல் நிகழ்வும் 6 மணிக்கு உற்சவர் பக்தோசித பெருமாளுக்கும் அமிர்தவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்….

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Cholingar ,Cholinger ,Makalakshmi ,Vainava ,Bankuni ,
× RELATED பெசன்ட் நகர், அருள்மிகு மகாலட்சுமி...