
ஐதராபாத்: 2021ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் ‘புஷ்பா’ படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சிறந்த இசையமைப்பாளர் விருதும் ‘புஷ்பா’வுக்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு கிடைத்து இருக்கிறது. புஷ்பா பட இயக்குனர் சுகுமார், தற்போது அல்லு அர்ஜுனை சந்தித்து தேசிய விருது வென்றதற்காக மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுது அல்லு அர்ஜுனை கட்டிப்பிடித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
The post அல்லு அர்ஜுனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத புஷ்பா பட இயக்குனர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.