×

பருவநிலை மாற்றத்தால் பெரியகுளம் பகுதியில் மாங்காய் உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பெரியகுளம்: பருவநிலை மாற்றத்தால், பெரியகுளம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் மாமரங்கள் அனைத்தும் இளம் தளிர்கள் எடுத்து பூக்களின்றி காணப்படுகின்றன. இதனால், இந்தாண்டு மாங்காய் உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, காலேபாடி, இமாம் பசந்து, செந்தூரம், கல்லாமை போன்ற பல்வேறு மா ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் பகுதியில் 70 முதல் 80 சதவீதம் மாம்பூக்கள் பூக்கும். மாம்பூ பூக்கும் மாதங்களான ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மாம்பூக்கள் பூக்கும். ஆனால், தொடர்ந்து பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மாம்பூக்கள் பூக்கள் பூக்காத நிலையில், தற்பொழுது மாமரங்கள் அனைத்தும் இளம் தளிர்கள் எடுத்து பூக்களின்றி காணப்படுகின்றன. எனவே, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு மாங்காய் உற்பத்தி செய்யும் மா விவசாயம், இந்தாண்டு முற்றிலும் முடங்கி உள்ளது. எனவே, தமிழக அரசு வேளாண் துறை ஆராய்ச்சியாளர்கள் மூலம் முறையான ஆய்வு செய்து தொடர்ந்து மா விவசாயிகளின் வருவாய் இழப்பை போக்க மா உற்பத்தியை பெருக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பருவநிலை மாற்றத்தால் பெரியகுளம் பகுதியில் மாங்காய் உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Manthop ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி