×

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் 108 கலசாபிஷேகத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில். இந்த கோயிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. அதன் நிறைவு நாளான நேற்று நாடியம்மனுக்கு இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் கடம் புறப்பட்டு நாடியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், திருக்குடமுழுக்கு குழுத்தலைவர் பாரத் மற்றும் திருக்குடமுழுக்கு விழாக்குழுவினர்கள் உள்பட பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாடியம்மனை வழிபட்டு சென்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலையில் நாடியம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது….

The post பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pattukottai Nadiamman Temple ,Pattukottai ,Maha Abhishekam ,Nadiyamman Temple ,
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்