மாஸ்கோ : உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா.சபையில் ரஷ்யா கொண்டு வந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஆதரிக்குமாறு அதன் உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய, நார்வே, அல்பேனியா, ஐயர்லாந்து ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா.கூட்டம் நடைபெறுகிறது. இதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து வெளிப்படையான விவாதம் நடைபெற உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்த பிரிட்டன் உக்ரைனில் ரஷ்யா பெரும் போர் குற்றங்களை நடத்தி வருவதாகவும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவில் சட்டவிரோதமான போர் அனைவருக்கும் ஆபத்தானது என்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டு வந்துள்ள மனிதாபிமான வரைவு தீர்மானத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் போலியானவை என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவின் தீர்மானம் மீது முழுமையான விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது….
The post உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டு வரும் மனிதாபிமான வரைவு தீர்மானம் : ஐ.நா. உறுப்பினர்கள் ஆதரவு தர ரஷ்யா வேண்டுகோள்!! appeared first on Dinakaran.
