×

ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ரத்த வாந்தி எடுத்த போலீஸ்காரர் பலி

சென்னை: எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஷ் (29). இவர், கடந்த 2009ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது, சென்னை மாநகர காவல் துறையில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோனிகா என்ற மனைவியும், ஹர்ஷிகா என்ற மகளும், ஹர்ஷித் என்ற மகனும் உள்ளனர். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த ஹரிஷ், கடந்த 25.6.2021 அன்று, திடீரென ரத்த வாந்தி எடுத்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போதே கல்லீரல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இந்நிலையில், காவல் நிலையத்தில் கடந்த 13ம் தேதி பணியில் இருந்தபோது, ஹரிஷ் மீண்டும் ரத்த வாந்தி எடுத்தார். உடனே அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு ெபாது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ரத்த வாந்தி எடுத்த போலீஸ்காரர் பலி appeared first on Dinakaran.

Tags : Jambazar police ,station ,CHENNAI ,Harish ,Nariankadu ,Egmore ,Tamil Nadu Police ,
× RELATED பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்