×

7ஜி தலைப்புக்கு பிரச்னை

சென்னை: கடந்த 2004ல் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நடித்தவர், சோனியா அகர்வால். பிறகு பல படங்களில் நடித்த அவர், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். மறுமணம் செய்துகொள்ளாத அவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள படத்துக்கு ‘7ஜி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் 2ம் பாகத்தை உருவாக்க இயக்குனர் செல்வராகவன் ஆயத்தமாகி வருகிறார் என்று தகவல் வெளியான நிலையில், சோனியா அகர்வால் நடிக்கும் படத்துக்கு ‘7ஜி’ என்று தலைப்பு வைத்திருப்பது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இப்படத்தை தயாரித்து இயக்கும் ஹாருண் கூறுகையில், ‘யாரும் உரிமை கோராததால் இத்தலைப்பை படத்துக்கு சூட்டினோம். இத்தலைப்புக்கும், சோனியா அகர்வாலுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பிறகுதான் தெரிந்தது. தலைப்பை அறிவித்ததும் யார், யாரோ போனில் பேசினார்கள். இத்தலைப்பை சோனியா அகர்வால் படத்துக்கு எப்படி வைக்கலாம்? யாரிடம் அனுமதி வாங்கினீர்கள் என்று மிரட்டும் தொனியில் பேசினார்கள். அவர்களிடம் நான், ‘சட்டப்படி சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டேன்’ என்றார்.

The post 7ஜி தலைப்புக்கு பிரச்னை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sonia Agarwal ,selvaraghava ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி