×

கடற்கரைக்கு பைக்கில் பாறைகள் கொண்டு சென்றதாக கணக்கு அதிமுக ஆட்சியில் தடுப்புசுவர் கட்டியதில் ரூ.64.34 லட்சம் ஊழல்: செயற்பொறியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா (முன்பு விளவங்கோடு) இரவிபுத்தன்துறை கடலில் 750 மீட்டர் நீளத்திற்கு கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க ரூ.3 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. டி.சி.ரமேஷ் என்பவருக்கு பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 11.1.2017 அன்று பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குவாரிகளில் இருந்து லாரிகளில் 1000 முதல் 1500 கிலோ எடைகொண்ட பாறைகளை எடுத்து வந்து  பேக்கிங் செய்வது இந்த கடல் அரிப்பு தடுப்பு சுவர் பணி. 1.11.2017 முதல் 20.1.2018 வரை இந்த பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 16,482.24 மெட்ரிக் டன் கற்கள் கடற்கரையில் கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.2 கோடி 80 லட்சத்து 42 ஆயிரத்து 534. லாரி பதிவு எண்களை ஆய்வு செய்ததில்  அது மோட்டார் சைக்கிள் மற்றும் மினி டெம்போ  எண்கள் என தெரிந்தது.  மேலும் கல்குவாரி உரிமையாளர்கள் அறிக்கைபடி 475.44 மெ.டன் கற்கள் மட்டுமே பணியிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 16482.24 மெட்ரிக் டன்களுக்கு பதிலாக  475.44 மெட்ரிக் டன் கற்கள் மட்டும் கொண்டுவரப்பட்ட நிலையில் 16006.8 மெட்ரிக் கடன் கற்கள் பணியிடத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக் டன்-க்கு ரூ.402 வீதம் ரூ.64 லட்சத்து 34 ஆயிரத்து 733 ஊழல் நடந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பணிக்காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட கடலரிப்பு தடுப்பு பிரிவு செயற்பொறியாளராக இருந்த கிறிஸ்துநேசகுமார், கோதையாறு உதவி திட்ட குழித்துறை உதவி கோட்ட உதவி செயற்பொறியாளர் பணியில் இருந்த அர்ஜுனன், தக்கலை கடலரிப்பு தடுப்பு கோட்ட உதவி பொறியாளர் தாணுமூர்த்தி, ஒப்பந்ததாரர் ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post கடற்கரைக்கு பைக்கில் பாறைகள் கொண்டு சென்றதாக கணக்கு அதிமுக ஆட்சியில் தடுப்புசுவர் கட்டியதில் ரூ.64.34 லட்சம் ஊழல்: செயற்பொறியாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nagercoil ,Iraviphuthanthurai ,Kumari district ,Killiyur taluk ,Vilavankode ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது