×

வனிதா மகள் ஹீரோயின் ஆகிறார்

சென்னை: நடிகை வனிதா மகள் ஜோவிகா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இது குறித்து வனிதா கூறும்போது, ‘எனது மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஜோவிகா மும்பையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு பயிற்சி இன்ஸ்டியூட்டில் ஒரு வருடம் படித்தார். இதில் நடிப்பை கற்றுக்கொண்டார். இந்த இன்ஸ்டியூட்டில் தான் தீபிகா படுகோன், பிரீத்தி ஜிந்தா, ஹிரித்திக் ரோஷன், வருண் தவன் உள்பட பலர் படித்தனர்.

ஜோவிகா ஹீரோயினாக நடிப்பதற்கு, கதைகள் கேட்டு வருகிறோம். எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட ஹீரோயினுக்கு நல்ல கதாபாத்திரமும் கதைக்களமும் இருக்கிறதா என்பதை பார்த்து வருகிறோம். விரைவில் எனது மகள் நடிக்கும் சினிமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்’ என்றார்.

The post வனிதா மகள் ஹீரோயின் ஆகிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vanitha ,Chennai ,Jovika ,Anupamker Acting Training Institute ,Mumbai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தாதா கேரக்டரில் சோனியா அகர்வால்