×

மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி

கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் தட்டுபாடு ஏற்படாமல் கிடைப்பதற்காக, ஆறுகளில் இருந்து மணல் எடுக்கலாம் என்கிற வரையறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ஆளும் கட்சி ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் மணல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றம், மக்கள் வாங்கி செல்லும் வகையில் பொது இடத்தில் மணல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், எந்த கொள்முதல் நிலையத்திலும் மக்கள் நேரில் வந்து மணல் பெற முடியாத நிலை தான் உள்ளது. இதுவரை சாதாரண குடிமகன் அரசு சொல்கிற இடத்தில் ஒரு லோடு மணல் வாங்க முடியாது. ஆனால், அரசு பொதுமக்களுக்கு நேரடியாக மணல் தருகிறோம் என்று கூறுகிறது. அதாவது, ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்று மணலை வாங்கலாம் என்று கூறினாலும், சாதாரண ஒரு வீடு கட்ட பொதுமக்கள் நேரில் சென்று மணல் வாங்க முடியாது. அதற்கு மறைமுகமாக ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய இடத்தில் மணலை வந்து கொட்டி, போலி ரசீது அடித்து அரசு அலுவலரின் உதவியுடன் மணலை விற்பனை செய்கின்றனர். மணலுக்கான தேவை அதிகமாக உள்ளது. மணல் இங்கு தேவையான அளவு உள்ளது. ஆனால், மணல் கிடைப்பதில்லை. அதே ேபான்று ஒவ்வொரு ஆண்டும் மணல் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு குவாரிகள் இல்லாதது காரணம் என்று சொல்கின்றனர். ஆனால், உண்மையில், அது அல்ல. பதுக்கல் நடக்கிறது. பாலாறு பாதுகாப்பு குழு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குடிநீர் பகுதிகளில் மணல் எடுக்க கூடாது என்று உத்தரவு போடுகின்றனர். 2 அடிக்கு மணல் எடுக்க உத்தரவு போட்டால் 40 அடி வரை மணல் எடுக்கப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் அனைத்து ஆற்றுப்பகுதிகளில் இப்படி தான் மணல் எடுக்கப்படுகிறது. மழைகளின் முதல்வர் என்று எடப்பாடியை புகழ்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசினார். ஆனால், மழை பெய்தது உண்மை தான். ஆனால், அந்த மழையால் ஆற்றில் மணல் வந்து சேர்ந்ததா என்றால் இல்லை. எந்த தடை இல்லாமல் மணல் எடுக்கப்பட்டதால், மழையால் கிடைத்த வெள்ள நீர் ஆற்றில் இறுக்கப்பிடிக்கவில்லை. ஆற்றில் மணல் இருந்தால், மழை நீரை இறுக்கப்பிடித்து பக்கவாட்டு நிலத்தடி நீர் அதிகரித்து இருக்கும். கிணறு நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். ஆனால், எல்லா நீரும் கடலில் கலந்து விட்டது. மணல் வியாபாரத்தில் எந்த வெளிப்படைத்தன்மை இல்லை. மணல் இவ்வளவு தான் என்று மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தால் இல்லை. இது ஒரு வகையான மோசடி.குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட்டன என்று கூறினார்கள். ஆனால், இந்த ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மணல் முழுக்க, முழுக்க கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை விற்க தான் ஆரம்–்பித்தார்கள். குடிமராமத்து திட்டத்துக்கு செலவிடப்பட்ட ரூ.5 ஆயிரம் கோடி மணலை அள்ளத்தான். அந்த மணலை அள்ளிய காசு ரூ.10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. அந்த பணம் எங்கு சென்றது. அறிவிக்கப்படாத நவீன ஊழல் எது. இது நம் கண்ணுக்கு தெரிந்தது குடிமராமத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி தான் தெரிகிறது. ஆனால், மணல் அள்ளியதால் கிடைத்த வருவாய் யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை. குடிமராமத்து திட்டம் தண்ணீரை தேக்கி வைக்கும் திட்டம் அல்ல. கிராமப்புறங்களில் ஆடு, மாடு குளிப்பாட்ட முடியும், மனிதர்களும் குளிப்பார்கள். ஆனால், இப்போது எந்த குளங்களிலும் மனிதர்கள் குளிப்பதற்கோ, ஆடு,மாடு குளிப்பாட்டுவதற்கு, துவைப்பதற்கான இடமாக இல்லை. காரணம், 10 அடி தோண்ட வேண்டிய இடத்தில் 50 அடி தோண்டி கிணறாக்கி விடுகின்றனர். இந்த அரசு வெளிப்படைத்தன்மை என்கிற பெயரில் பணச்சுரண்டலாக இந்த திட்டத்தை பார்க்கின்றனர். தமிழகத்தில் 121 கிளை, பெரு நதிகள் உள்ளது. மணல் இருக்கும் தேவை இருக்கு. ஆனால், இவர்கள் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, அமைச்சர்கள் தங்களது பினாமியை வைத்து கொண்டு மணல் அள்ளி சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். கருப்பன், சுப்பன் வாங்கியதாக போலி பில் தயாரித்து அதை அதிக விலைக்கு விற்கின்றனர். வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே மணல் சுரண்டலை தடுக்க முடியும். ஒரு பொதுமக்கள் நேரடியாக சென்று மணலை எப்போது வாங்க முடிகிறதோ அப்போது த ான் வெளிப்படையான நிர்வாகமாக இருக்கும். மணல் எவ்வளவு வெளியே போய் இருக்கிறது. எவ்வளவு பேர் வாங்கியுள்ளனர், எவ்வளவு வருமானம் என்று கணக்கில் இருக்க வே்ணடும்.மணல் 4 அடிக்கு மேல்  எடுக்க கூடாது என்கிற உத்தரவு உள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், 12 அடிக்கு மேல் மணல் அள்ளுகின்றனர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெருமழை பெய்கிற காலத்தில், எவ்வளவு மழை பெய்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயருவதில்லை. இதனால், தான் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம், வறட்சி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இது தான். இவர்களது பேராசையால் குடிநீர் பஞ்சம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆற்றுமணலுக்கு மாறாக வெளிநாடுகளில் இருந்து மாற்று மணலை தமிழகத்தில் இறக்குமதி செய்ய கம்போடியா, மலேசியா போன்ற நாடுகள் தயாராக இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் இந்த மணல் தான் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தமிழத்தில் உள்ள வியாபாரிகள் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி, சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால், இந்த அரசு மணலை விற்பனை செய்ய விடாமல் தடுத்தது. இதனால், வியாபாரிகள் வெளிநாட்டு மணலை கொண்டு வந்து விற்பனை செய்ய தயக்கம் காட்டினார்கள். அவர்கள் மறைமுகமாக எங்கள் மணலை தான் வாங்க வேண்டும். மணல் தட்டுபாட்டு வரும் போது, நீதிமன்ற நாடிய போது, எம்சாண்ட், மாற்று மணல் விற்பனை செய்வது தொடர்பாக வாய்மொழியாக அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுத்தார்களே தவிர அதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மக்கள் எம்சாண்ட் மணல் பயன்படுத்தினால் ஒரு தரப்பு, எம்சாண்ட் கட்டினால் உறுதியாக இருக்காது என்று வதந்தியை கிளப்பி வருகின்றனர். உலகத்தில் ஆறுகள் இல்லாத நாடுகளில் எம்சாண்ட் மணல் பயன்படுத்தி தான் பல அடுக்குமாடி கட்டிடம் கட்டியுள்ளனர். ஆனால், இந்த அரசு மாற்று மணல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தயங்குகிறது. இதற்கு, மணல் மாபியாக்களிடம் பல கோடி லஞ்சம் வாங்கியுள்ளனர். எனவே, ஆற்றுமணலை சுரண்டி விற்றால் மட்டுமே கமிஷன் கிடைக்கும். மாற்றுமணல் வந்தால் இந்த மணல் கொள்ளை லாபம் பறிபோகும் என்று அந்த சிந்தனையே அவர்களுக்கு இல்லை. மேலும், மணல் கொள்ளையை தடுக்கவும் எந்தவிதமான திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவும் விரும்பவில்லை. பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை தமிழக அரசின் கீழ் தான் வருகிறது. இந்த துறை அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்காமல் அவர்கள் சாக்கு போக்கு சொல்வதற்காக ஆளும் கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு பயந்து கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக பொய் கூறுகின்றனர்.  இந்த மணல் மாபியா கும்பல்களால் ஆறுகளில் தொடர்ந்து மணல் சுரண்டப்படுவதை தடுக்கா விட்டால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்….

The post மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rajievkandi ,Co-Secretary of State for Communication ,Dizhagam ,Co-Secretary ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...