×

ரூ.53,000 கோடியாக உயர்ந்த வெளிநாட்டுக் கடன்…எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த இலங்கை : அதிபர் பதவி விலக முழக்கம்!!

கொழும்பு : மிகப்பெரிய பொருளாதார சீரிழிவை இலங்கை சந்தித்து இருப்பதை கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் வலியுறுத்தி கொழும்புவில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் பணமதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இலங்கையின் வெளிநாட்டு கடன் ரூ.53,000 கோடியை தாண்டியுள்ளது. மின் உற்பத்தி சரிவு, எரி பொருள் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பு என பல வழிகளிலும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் நெருக்கடிகள் கழுத்தை நெரிக்கிறது. இலங்கையின் பணமதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்து வருவதால் டாலர் வர்த்தகத்தை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து பழங்கள், பால் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், கார்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசு இலங்கையை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளனர். பொருளாதார சீரழிவுக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்ஷே பதவி விலக வலியுறுத்தி ஐக்கிய மக்கள் கட்சி கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணியை சென்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.வாழவே முடியாத அளவிற்கு நெருக்கடிகள் சூழ்ந்துவிட்டதாகவும் கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசை அகற்றியே தீருவோம் என்றும் பொதுமக்கள் முழங்கினர். …

The post ரூ.53,000 கோடியாக உயர்ந்த வெளிநாட்டுக் கடன்…எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்த இலங்கை : அதிபர் பதவி விலக முழக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Srilankan ,President ,Gothabaya Rajapakse ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்