×

பயிர் சுழற்சி முறையில் கோதுமை விவசாயம் -அமைச்சர் ஆய்வு செய்தார்

ஊட்டி :  குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தில் பயிர் சுழற்சி முறையில் கோதுமை பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தை வனத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்கள் தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. காய்கறி பயிர்களில் நூற்புழுக்களின் தாக்கத்தை குறைக்க பயிர் சுழற்சி முறையில் கோதுமை பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.பயிர் சுழற்சி முறையை காய்கறி விவசாயிகள் மத்தியில் ஊக்கப்படுத்தும் வகையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ஐசிஏஆர்., கோதுமை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரனுக்கு சொந்தமான நிலத்தில் குன்னூர் அருகே பெட்டட்டி கிராமத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சம்பா கோதுமை சாகுபடி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் வயல் விழா நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி முன்னிலை வகித்து, காய்கறி பயிர்களில் பயிர் சுழற்சி முறைகள் குறித்து விளக்கி பேசினார். சாகுபடி செய்யப்பட்ட கோதுமை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு இயந்திரத்தின் மூலம் கதிரடித்தல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார். இவ்விழாவில் கோதுமை ஆராய்ச்சி நிலைய கள அலுவலர்கள் பங்கேற்று கோதுமையின் முக்கியத்துவம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்….

The post பயிர் சுழற்சி முறையில் கோதுமை விவசாயம் -அமைச்சர் ஆய்வு செய்தார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Minister of Forestry ,Pettatti ,Coonoor ,Dinakaran ,
× RELATED ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை...