×

சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர் சிறையில் அடைப்பு

காரைக்கால் :  காரைக்கால் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7ம் தேதி வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி குறித்த விவரம் தெரியவில்லை. பெற்றோர்கள் விசாரித்ததில் பள்ளி அருகே சிறுமியை யாரோ ஒரு நபர் கடத்தி சென்ற தகவல் அறிந்து, திருநள்ளாறு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தேடினர். மேலும், காரைக்கால் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவின்பேரில் எஸ்பி நித்தின் கவுகால் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரித்ததில் சிறுமி  சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சென்று சிறுமியை போலீசார் மீட்டு காரைக்கால் கொண்டு வந்தனர்.  விசாரணையில், கும்பகோணம் அடுத்த செட்டிமண்டபம் முத்தையா நகரை சேர்ந்த முபாரக் மகன் முஷாரப் (21) என்பவர், சிறுமியிடம் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால், அம்பகரத்தூர் வந்து நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர், சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி, சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுமியின் வாக்குமூலத்தின்பேரில், முஷாரப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்….

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Ambagarathur ,Thirunallar ,
× RELATED காரைக்கால் அம்மையார்-பரமதத்தர்...