×

ரத்தினமங்கலம் வனக்காட்டில் காணாமல் போன விவசாயி எலும்புக்கூடாக மீட்பு

கூடுவாஞ்சேரி: கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன விவசாயியை நேற்று ரத்தினமங்கலம் வனக்காட்டில் எலும்புக்கூடாக போலீசார் மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (59). விவசாயி. இவருக்கு மனைவி மாரியம்மாள், மகன் பாரத், மகள்கள் எழிலரசி, பிரபா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மாடுகளை ஓட்டி வருவதாக சந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இப்புகாரின்பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன விவசாயி சந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ரத்தினமங்கலம் வனப்பகுதி வழியே ஒரு வாலிபர் சென்றபோது, அங்கு ஓரிடத்தில் காக்காய் கூட்டம் சுற்றுவதை கண்டார். அங்கு சென்று பார்த்தபோது, ஒரு சடலம் எலும்புக்கூடாக இருப்பதை பார்த்து வாலிபர் அதிர்ச்சியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் சந்திரனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு எலும்புக்கூடாக இருப்பது சந்திரன் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாழம்பூர் போலீசார் விரைந்து வந்து சந்திரனின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தடயவியல் சோதனை நடைபெற்றது. இதையடுத்து சந்தேக மரணம் என தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அவர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post ரத்தினமங்கலம் வனக்காட்டில் காணாமல் போன விவசாயி எலும்புக்கூடாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ratnamangalam Vanakad ,Kooduvancheri ,Ratinamangalam Vanakad ,
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...