×

கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் சீறிப்பாய்ந்தன

பொன்னமராவதி: கண்டியாநத்தத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக கடந்த சில நாட்களாக வாடிவாசல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்வையிடும் வகையில் மேடைகள் அமைக்கப்பட்டது. திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்திருந்த கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசோதனை நடந்தது. இறுதியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து இன்று 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் பல காளைகள் வீரர்களுக்கு சிம்மசொப்பமாக நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, மிக்சி, சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரஹீம் தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த வீரர்களுக்கு உடனுக்குடன் முதலுதவி சிகிச்ைசயை அங்கேயே மருத்துவ குழுவினர் அளித்தனர்….

The post கண்டியாநத்தத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் சீறிப்பாய்ந்தன appeared first on Dinakaran.

Tags : Jallikuttu ,Kandyanam ,Ponnamarawati ,Jallikat ,Kandyanatham ,Kandyanatham Village ,Pudukkotta District Ponnamarawati ,Kandanaktham ,Jallikadu ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே நெய்வேலியில் புதிய கலையரங்கம்