×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 18ம் தேதி மாலை நடக்கிறது: அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 18ம் தேதி மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் வருகிற 18ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் 19ம் தேதி வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தொாடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். சுமார் 25 நாட்கள் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற 18ம் தேதி மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் பிரச்னைகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும். மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை எவ்வாறு சட்டப்பேரவையில் பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 18ம் தேதி மாலை நடக்கிறது: அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK MLAs ,Chief Minister ,M. K. Stalin ,Chief Whip ,Korada Kovi ,Chezhian ,Chennai ,President ,M.K.Stalin ,Chennai Anna Vidyalaya ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...