×

ஸ்டெயினை முந்தினார்

டெஸ்ட் விக்கெட் வேட்டையில் கபில்தேவின் சாதனையை (434) சமீபத்தில் முறியடித்திருந்த அஷ்வின், நேற்று குசால் மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் சாதனையை (439) சமன் செய்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மேலும் 3 விக்கெட் சாய்த்த அவர், ஸ்டெயினை பின்னுக்குத் தள்ளி 442 விக்கெட்டுடன் 8வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் வால்ஷ் (519) 7வது இடத்தில் உள்ளார். * அஷ்வின் 22வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கான கடைசி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த வகையில் ஆஸி. நட்சத்திரம் ஷேன் வார்னுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் அஷ்வின்.* இலங்கை கேப்டன் கருணரத்னே டெஸ்ட் போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்துள்ளார்.* கடந்த மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யபப்ட்டுள்ளார்.* ஸ்பெயினில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மின்டன் தொடரில் இந்திய குழுவினர் 6 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.* கோஹ்லியுடன் செல்பி எடுப்பதற்காக பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் நுழைந்த 4 ரசிகர்களை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்….

The post ஸ்டெயினை முந்தினார் appeared first on Dinakaran.

Tags : Stein ,Ashwin ,Kabilde ,Kusal Mendis ,Steyn ,Dinakaran ,
× RELATED சட்டக் கல்வியை 5 ஆண்டுகளில் இருந்து 3...