×

போதையில் தாயுடன் தகராறு தட்டிக்கேட்ட தந்தையை கொல்ல முயன்ற மகன்: பாடியில் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி, அவ்வை நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (80). இவரது மனைவி ராணி (65). இவர்களது மகன் சங்கர் (34),  பெயின்டர். இவரது மனைவி விஜயலட்சுமி (30). சரிவர வேலைக்கு செல்லாத சங்கர், மது குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன், விஜயலட்சுமி, சங்கரை விட்டு பிரிந்து சொந்த ஊரான விருத்தாச்சலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சங்கரின் தந்தை சுந்தரமூர்த்தி ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் சங்கர் போதையில் வீட்டுக்கு வந்து, தாய் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை சுந்தரமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சங்கர், அவரை கட்டிலில் இருந்து இழுத்து போட்டு அடித்து உதைத்துள்ளார். இதில், சுந்தரமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் ராணி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து சங்கரை நேற்று  கைது செய்து சிறையில் அடைத்தனர். …

The post போதையில் தாயுடன் தகராறு தட்டிக்கேட்ட தந்தையை கொல்ல முயன்ற மகன்: பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Badi ,Ampathur ,Sundharamurthy ,Periyar Street, Avvai Nagar ,Rani ,
× RELATED அக்னி வீர வாயு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு