×

பெருக்கரணை கிராமத்தில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

செய்யூர்: செய்யூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேகற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருக்கருணை கிராமத்தில் நடுபழனி என்றழைக்கப்படும் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், 12 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 13ம் தேதி காலை 9 மணிக்கு மலை மீது கோயில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற்றன.இந்நிலையில், நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனிதநீர் கும்பங்கள் புறப்பட்டு மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி கோபுரம்,  மரகத தண்டாயுதபாணி மூலவர் கோபுரம் ஆகியவற்றுக்கு மைசூர் அவதூத இளைய பீடாதிபதி பூஜ்ஜிய தத்த விஜய் ஆனந்த தீர்த்த சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்….

The post பெருக்கரணை கிராமத்தில் தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Dandayuthapani Temple ,Kumbabhishekam ,Purtaranai village ,Seyyur ,Naduphalani Maragata Dandayuthapani temple ,Purdaranai village ,Dandayuthapani Temple Kumbabhishekam ,Avartaranai village ,
× RELATED திருவெறும்பூர் அருகே தீப்பாஞ்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்