×

சிறுபான்மை மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு சிறுபான்மை நல அலுவலர் நியமனம்: முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்திட ஒரு பொறுப்பு அலுவலர் இல்லாத காரணத்தால் அத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. எனவே மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். சிறுபான்மை மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் கோரிக்கையினை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட சிறுபான்மை நல அலுவலரை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் செலவில் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.இந்த மாவட்ட சிறுபான்மை அலுவலர்கள் முதல் கட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் செயல்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 5 மாவட்டங்களுக்கு இப்படி விரிவாக்கம் செய்யப்படும். சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த பணி நியமனங்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காலம் அறிந்து, தேவையறிந்து சிறுபான்மை மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த இந்த அருமையான நடவடிக்கைக்காக சிறுபான்மை மக்கள் நன்றி கடன் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post சிறுபான்மை மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு சிறுபான்மை நல அலுவலர் நியமனம்: முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி appeared first on Dinakaran.

Tags : Peter Alfonse ,Minority Welfare Officer ,Chennai ,Tamil Nadu ,Minority Welfare Commission ,Peter Alfones ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு