×

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்: சிவ சிவ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்த பக்தர்கள்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய வீதிகளின் வழியாக  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 8.45 மணிக்கு திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிவ சிவ கோஷம் முழங்க, பக்தர்கள் தேரை 4  மாட வீதிகளில் இழுத்துச் சென்றனர். தொடர்ந்து நாளை மற்றொரு முக்கிய நிகழ்வான அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி  நடைபெறுகிறது. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.  இதையொட்டி கடந்த மார்ச் 8ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.  10 நாள்  நடக்கும் பங்குனி பெருவிழா நடைபெறும். இதையொட்டி கடந்த மார்ச் 8ம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து 9ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்றிரவு வெள்ளி ரிஷபவாகன பெருவிழாவும் நடந்தது. 10ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 11ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 12ம் தேதி தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 13ம் தேதி சவுடல் விமானத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 14-ம் தேதி காலை பல்லக்கு விழா மற்றும் இரவு இரவு 10.30 மணியளவில் ஐந்திரு மேனிகள் யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பாதுகாப்பு பணிகள்: சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 1  இணை ஆணையர், 5 துணை ஆணையர் உட்பட 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விழாவிற்கு வருகை தரும் பக்தர்களும், பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படாமல் இருக்க வாகனங்களை நிறுத்துவதற்கும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்தும் சிறப்பான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறை செய்துள்ளனர். கோயிலை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் காவல் துறையின் 4 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி 4 மாடவீதிகளிலும் 32 சிசிடிவி கேமராக்களும், கோவிலின் உள்ளே 36 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 68 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே 4 காவல் கண்காணிப்பு கோபுரங்களும், கோயிலுக்கு வெளியே 4 மாட வீதிகளில் 10 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் என மொத்தம் 14 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது….

The post சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்: சிவ சிவ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Panguni Festival ,Kapaleeswarar Temple ,Mylapore Chennai ,Shiva ,CHENNAI ,Panguni festival procession ,Mylapore Kapaleeswarar temple ,Mylapore Kabaleeswarar temple ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்...