×

குழந்தை நட்சத்திரம் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’

சென்னை: கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, ஜி.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம், ‘ரங்கோலி’. வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கியுள்ளார். ‘தெய்வத்திருமகள்’, ‘மாநகரம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹமரேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மற்றும் பிரார்த்தனா சந்தீப், சாய், அக்‌ஷயா, ஆடுகளம் முருகதாஸ், அமித் பார்கவ் நடித்துள்ளனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது ஹமரேஷ் பேசுகையில், ‘ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் எனக்கு நடிப்பு பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர். இப்படம் தரமாக உருவாக வாலி மோகன்தாஸ் மற்றும் படக் குழுவினர் கடுமையாக உழைத்துள்ளோம்’ என்றார். நடிகர் உதயா, இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோரின் சகோதரி மகன் ஹமரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பள்ளி மாணவ, மாணவியர்களின் கலகலப்பான வாழ்க்கை மற்றும் பிரச்னைகள் குறித்து பேசும் படமாக ‘ரங்ேகாலி’ உருவாகியுள்ளது.

The post குழந்தை நட்சத்திரம் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : K. Babu Reddy ,G. Satishkumar ,Gopuram Studios ,Wali Mohandas ,Hamaresh ,Prarthana Sandeep ,Sai ,Akshaya ,Adukalam… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெரியவர்களுக்காக உருவான குழந்தைகள் படம்