×

உக்ரைனில் ரஷ்ய ராணுவம், கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாஸி படைப் போன்று செயல்பட்டு வருவதாக உக்ரைன் தூதர் சாடல்!!

கீவ் : உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம், கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாஸி படைப் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா.வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் நியுயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நாவுக்கான உக்ரைன் பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர் சூழல்கள் பற்றி பேசினார். உக்ரைனில் கண்மூடித்தமான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய படையினர் மனிதாபிமானமின்றி பொதுமக்கள் வழித்தடங்களில் குறிவைத்து தாக்கி அழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.கொடுங்கோல் ஆட்சியாளர் நாஸி படைப் போன்று ரஷ்ய படையினர் செயல்பட்டு வருவதாக ஐ.நா. சபையில் செர்கீ புகார் கூறினார்.மேலும் அவர் பேசியதாவது, ‘ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனில் தொடர்ந்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து வருகின்றன.80 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் நாஸி  முன்னோடிகளின் படை போன்றே செயல்பாடுகள் உள்ளன.கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஒட்டு மொத்தமாக புதைக்கப்படுகின்றன.ஆக்கிரமிக்கப்பட்ட தேசிங்களில் அரசு நிர்வாகிகள், பொதுமக்கள், செய்தியாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்,’ என்றார். ரஷ்ய படையால் கடத்தி சிறை வைக்கப்பட்டு இருக்கும் மாகாணங்களின் நிர்வகிப்பார்களை விடுதலை செய்ய ரஷ்யாவிற்கு ஐ.நா.அழுத்தம் தர வேண்டும் என்று உக்ரைன் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒத்துழைக்க மறுக்கும் மாகாண நிர்வாகிகளை ரஷ்ய ராணுவம் சித்ரவதைக்கு உள்ளாக்குவதாக செர்கீ குற்றம் சாட்டியுள்ளார்….

The post உக்ரைனில் ரஷ்ய ராணுவம், கொடுங்கோல் ஆட்சியாளர் ஹிட்லரின் நாஸி படைப் போன்று செயல்பட்டு வருவதாக உக்ரைன் தூதர் சாடல்!! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Ambassador ,Saddal ,Nazi ,Hitler ,Kiev ,Russian Military ,Nazi Force ,Saddle ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தகவல்