×

மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூரில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள  காமாட்சி அம்பிகை உடனுறை  ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி விநாயகர் பெருமான் சிறப்பு பூஜையுடன் விமரிசையாக தொடங்கியது. தினமும் காலை, மாலை, இரவில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 8.21 மணிக்கு பக்தர்கள், தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். எராளமான பக்தர்கள், தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Ekambaranatha ,Temple ,Ponneri ,Meenjoor ,Swami.… ,Ekambaranatha Temple ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை