×

தாம்பரம் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நாளை முதல் இணைப்பு: தெற்கு ரயில்வே தகவல்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முன்பதிவு இல்லாத பெட்டிகள் வசதி மீண்டும் வழங்கப்படுகிறது. மார்ச் 16ம் தேதி முதல் ரயில் எண்: 22657 தாம்பரம்- நாகர்கோவில் ஜங்ஷன் வாரம் மூன்று முறை சூப்பர் பாஸ்ட் ரயில், ரயில் எண்: 22658 நாகர்கோவில் ஜங்ஷன்- தாம்பரம் வாரம் மூன்றுமுறை இயக்கப்படும் ரயில் (நாகர்கோவிலில் இருந்து மார்ச் 17 புறப்படுவது) ஆகியவற்றில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படுகிறது.பயணிகள் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களி்ல இருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். அடுத்தகட்டமாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் மார்ச் 20, ஏப்ரல் 1, 16, 20, மற்றும் மே 1ம் தேதி முதல் கூடுதல் ரயில்களில் இணைக்கப்படும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தாம்பரம் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நாளை முதல் இணைப்பு: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Southern Railway ,Nagarko ,Thiruvananthapuram ,Gota News ,Corona ,TAMBAR ,
× RELATED தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்...