×

கொடைக்கானலில் பரவிய காட்டுத்தீ கார்த்தி விழிப்புணர்வு வீடியோ

சென்னை: தமிழகத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். அங்கு கடந்த சில நாட்களாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இயற்கை வளங்கள், மூலிகை வகைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பரப்பு அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், ‘கோடை வெயிலுக்கு இதமளிக்க இயற்கை நமக்களித்த வரம் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அங்கு சென்று வருவது ஒரு கனவாக இருக்கும். எத்தனையோ வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் அங்கே இருக்கின்றன. ஒரு சின்ன தீப்பொறி பட்டால் போதும், காட்டோடு சேர்ந்து பறவைகளும், வனவிலங்குகளும் அழிந்து போகும் அபாயம் இருக்கிறது. எனவே, பொதுமக்களாகிய நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காட்டுத்தீக்கு எதிரான போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம்’ என்று பேசியுள்ளார்….

The post கொடைக்கானலில் பரவிய காட்டுத்தீ கார்த்தி விழிப்புணர்வு வீடியோ appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kodakianal ,Tamil Nadu ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு