×

பழநி மலைக்கோயிலில் ஒரு லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவு முதலே பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. லாட்ஜ், திருமண மண்டபங்கள் முழுவதும் புக் செய்யப்பட்டிருந்தன. திருஆவினன்குடி கோயிலில் நேற்று ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. பக்தர்கள் மற்றும் திருமண வீட்டார் வந்த வாகனங்கள் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டதால் அடிவாரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.முகூர்த்த நேரத்தில் பழநி வையாபுரி கண்மாய் பைபாஸ் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது. போக்குவரத்து போலீசார் உடனடியாக போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அன்னதானக் கூடத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர்….

The post பழநி மலைக்கோயிலில் ஒரு லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Palani Malaikhoil ,Phalani Dandaithapani ,Dindigul ,Shwami Temple ,Bankunit festival ,Palanini Mountains ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...